ரெட் ஜெயன்ட் மூவீஸ் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. உதயநிதி அரசியலில் முழுமையாக இறங்கியுள்ளதால் அந்த தயாரிப்பு நிறுவன பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி ஏற்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் சார்பில் இன்பன் உதயநிதி தான் வெளியிட்டார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு சமூக கருத்தை மையப்படுத்திய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய கூட்டணி குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.