Friday, September 26, 2025

முதல் முறையாக விஜய்யை போட்டுத் தாக்கிய உதயநிதி!!

2026- க்கான சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 3 வது கட்ட பிரச்சாரம் நாளை சனிக்கிழமை, அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரம் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து வருகிறார்.மேலும், விஜய் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

கடந்த வாரம் கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் திமுகவை பொளந்து கட்டிய விஜய், சொந்த மாவட்டத்தையே முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் மாற்றி விட்டதாக கடுமையாக விமர்சனம் செய்தார். அதே நேரத்தில் விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என திமுக, நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது மட்டுமின்றி “விஜய் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருகிறார். மற்ற நாட்களில் ஏன் வெளியே வருவதில்லை? இப்படி பார்ட் டைம் அரசியல் செய்தால் வேலைக்கு ஆகாது” என பல்வேறு தரப்பினர்தெரிவித்து வந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு நாகையில் விளக்கம் அளித்த விஜய், ”மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது. உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளாக பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோ. அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி, விஜய்யை நேரடியாக தாக்கியுள்ளார். அதாவது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி, ”நான் வெறும் சனிக்கிழமை மடும் வெளியே வர மாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் வருவேன். சுத்திட்டு தான் இருப்பேன். ஓ.. இன்னைக்கு வெள்ளிக்கிழமையா?” என்று விஜய் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக கிண்டலாக பேசினார்.

திமுக ஆட்சியை விஜய் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு உதயநிதி எவ்வித ரியாக்சன் காட்டியதில்லை. இந்த நிலையில், தற்போது முதன் முறையாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார். இதற்கு தவெகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News