திருப்பூர் அருகே இளைஞரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து நகை மற்றும் பணம் பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர் சங்கராபுரம் கிழக்கு பாரதி நகரை சேர்ந்த ஹரி பிரசன்னா என்ற இளைஞர், பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரை குறிப்பிட்ட செயலி மூலம் இளைஞர் ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததன் பேரில், காட்டுப்பாளையத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞர், மற்றொரு இளைஞருடன் சேர்ந்து ஹரி பிரசண்ணா கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்கசங்கிலி மற்றும் 30 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இது குறித்து ஹரிபிரசன்னா நல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்பூர், செரங்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அபிநிவாஸ் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.