தமிழகத்தில் கடந்த 16ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 14-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 19-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
