சென்னை கண்ணகி நகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மதன்குமார் (20)என்பவர் தனது மாமா பெயரில் உள்ள இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.
இவருடைய வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதையடுத்து, கண்ணகி நகர் காவல் நிலையத்தில் தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டது என புகார் அளித்தார். கண்ணகி நகர் போலீசார் விசாரணையில் சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் திருடி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.