Friday, April 25, 2025

பள்ளி மாணவர்களை தாக்கிய இரண்டு பேர் கைது

காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி மாணவர்களை தாக்கிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இரவு நண்பர்களுடன் இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாகனம் பழஞ்சநல்லூர் பகுதியில் பழுதாகி நின்றுள்ளது.

அதனை நண்பர்களுடன் சரிசெய்து கொண்டிருந்த போது பழஞ்சநல்லூர் மெயின்ரோடு பகுதியை 3 பேர் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிதாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் , தனது மகனை தாக்கியவர்கள் மீது தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவரின் பெற்றோர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களை தாக்கிய 2 பேரை கைது செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Latest news