சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரின் பிரபலமான பறவை லோகோ ஏலத்தில் விற்கப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதை ‘எக்ஸ்’ என பெயரை மாற்றினார்.
இந்நிலையில் ட்விட்டரின் பிரபலமான பறவை லோகோ, $34,375 க்கு விற்கப்பட்டது. இந்த லோகோ 12 அடி நீளமும் 9 அடி அகலமும் (3.7 மீ x 2.7 மீ) கொண்டது மற்றும் 560 பவுண்ட் (254 கிலோ) எடை கொண்டது.