இந்துத்துவ சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் : விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவ சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை, கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது’ என்று கூறினார்.