காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்து வருகிறது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு தவெக தலைவர் விஜய் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதால் தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாவின் படத்தை வைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்றாங்கன்னு நான் சொல்லியா உங்களுக்கு தெரியும் என நேரடியாக திமுகவை விமர்சித்தார்.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கு அவங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை எந்த வாய்க்கால் வரப்பு தகராறும் இல்லை. அப்படியே இருந்தாலும் நாம் கண்டுக்கொள்ள போவதில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால் நாம் எல்லாம் அப்படி இல்லை.
பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே… என்று கூறி விட்டு சிரித்தார்.
பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி? எனக்கூறினார்.
