Wednesday, April 23, 2025

புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து தவெக நிர்வாகிகள் சாலை மறியல்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை அக்கட்சி பெண் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கி வந்த நிலையில் அதனை பார்வையிட சென்ற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்

இதனை கண்டித்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு – திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அப்போது தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கைது செய்யப்பட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest news