தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த போராட்டம் நடை பெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், கட்சியினரிடையே கட்சி பதவிக்காக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார். ஆதவ் அர்ஜூனாவின் படத்தை பேனரில் போட்டதற்காக பிரதீப் என்ற வட்டச் செயலாளரை பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்றனர்.
