கடந்தாண்டு பிப்.2 ஆம் தேதி நடிகர் விஜய், தனது புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு கடந்தாண்டில் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் மாநாட்டையும் விஜய் நடத்தியிருந்தார்.
கட்சி தொடங்கிய ஓராண்டை அண்மையில் கொடியேற்றி கொண்டாடிய விஜய், கட்சி நிர்வாகிகளை நியமித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள Confluence Convention Centre-ல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.