விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை இடம்பெற்றுள்ளது. இதனால் விஜய் கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.