சென்னை அடையாற்றில் அமமுகவின் புதிய தலைமை அலுவலத்தை அக்கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி தினகரன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. சட்டம். ஒழுங்கு பிரச்சனையை திசை திருப்ப இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளனர்.
2026ல் Getout DMK என்று சொல்லப் போகிறோம். திமுகவை வீழ்த்துவது தான் 2026ல் அமமுக வியூகம். வீணாய் போன பழனிச்சாமி பற்றி கேள்வி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகி என்றால் அது இபிஎஸ்தான் என அவர் பேசியுள்ளார்.