அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2ம் தேதி, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தார். அதை தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2ம் தேதி முதல் இதுவரை 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் வரிவிதிப்பு, 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டதால், சென்செக்ஸ் சற்று உயர்ந்தது, குறிப்பிடத்தக்கது.