ரஷியாவில் இருந்து பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடுமையான வரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், விவசாயப் பொருட்களுக்கான புதிய வரி உயர்வு இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க சந்தையில் இந்திய விவசாயப் பொருட்கள் குறைவான விலையில் கிடைப்பதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
