அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றபின் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் தினமும் வேற விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒருநாள் இந்தியாவுடன் மோதல் போக்கை காட்டுகிறார். மறுநாள் அதே இந்தியாவை “அமெரிக்காவின் நட்பு நாடு” எனவும், பிரதமர் மோடியை தனது நண்பர் எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் அதே சமயம் இந்திய பொருட்களுக்கு வரி விதித்துள்ளார்.
இப்படி மாற்றி மாற்றி பேசும் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருப்பதே தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் சேரீஃப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் ஐநா பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து சந்திப்பு நடத்தினர்.
அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு, சர்வதேச அரசியல் சூழல் மற்றும் வர்த்தக விவகாரங்களை மூவரும் விவாதித்தனர். இந்தியாவுடன் உறவில் பிரச்சினைகள் தொடரும் நிலையில், டிரம்ப் பாகிஸ்தான் தலைவர்களை சந்திப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை நண்பர் என கூறும் டிரம்ப், மறுபுறம் பாகிஸ்தான் தலைவர்களை சிறந்த தலைவர்கள் என்றும் பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த இரட்டைப் வேடம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முன்பாக, பாகிஸ்தான் பிரதமரும் ராணுவத் தளபதியும் வெள்ளை மாளிகையில் தாமதமாக ஒரு மணி நேரம் காத்திருந்து, பின்னர் சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்புக்கு முன்பாக டிரம்ப் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் சில அரபு நாடு தலைவர்களையும் சந்தித்து பேசினார். 8 இஸ்லாமிய அரபு நாடுகளின் தலைவர்களுடன் கூட கஸா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு முடிவுசெய்ய பற்றிய முக்கிய ஆலோசனையும் நடைபெற்றது.
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி டிரம்புடன் நெருங்கிய உறவை காட்டி வருகின்றனர். குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதலை நீக்குவதில் டிரம்ப் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்று அவர்கள் வெளிப்படையாகக் கூறினர். ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பொருத்தமானவர் என கூறி பாராட்டி இருக்கிறார்.