டிரம்பின் 12 அடி உயர தங்க சிலை!! காரணம் இதுவா?

அமெரிக்காவின் 47-ஆவது அரசுத்தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்று, பல திட்டங்களையும் மற்றும் அமெரிக்க அரசியலிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.அந்த வகையில் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

கிரிப்டோகரன்சி என்பது ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கரன்சி ஆகும்.இது டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே இருக்கும், நேரடியாக கையில் வைத்திருக்க முடியாது.குறிப்பாக இது கணினி நெட்வொர்க்குகள் மூலம் இயங்குகிறது.இந்த நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.

மேலும், இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர். இந்த சிலை பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள் கூறியது, “டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும். டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்” என்று தெரிவித்தனர்.

Related News

Latest News