Saturday, May 17, 2025

பாகிஸ்தானுக்கு கடன் கொடுத்த ‘டிரம்ப்’ ! கொதித்தெழுந்த அமெரிக்க ராணுவக் ‘கை’ !

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதைத் தாண்டும் முயற்சியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் – IMF – 8,500 கோடி ரூபாய்க்கு சமமான 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கோரியது.

இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்ததுதான் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடனுக்கு IMF-ல் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்கா ஆதரவாக வாக்களிக்க, அதே நேரத்தில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமலேயே புறக்கணித்தது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கப்பட்டதோடு, இதில் இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய் நிதியும் அடங்கியுள்ளது என்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததாலேயே, அமெரிக்க ராணுவ தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பென்டகனின் முன்னாள் ஆலோசகரும், அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த உறுப்பினருமான மைக்கேல் ரூபின், இது டிரம்ப் நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது – பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது, உலக சமாதானத்துக்கு பேராபத்தை உருவாக்கும் ஒரு தவறான முடிவாகும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 35 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஏற்கனவே 28 முறை கடன் பெற்றும், ஒரு தடவை கூட அதிலிருந்து மீண்டு முன்னேறவில்லை. ஒவ்வொரு முறையும் கடனை தீவிரவாதம் வளர்க்கும் நோக்கத்திற்கே பயன்படுத்தியுள்ளது.

தெற்கு ஆசியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்களில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு நேரடியாக ஆதரவளித்ததை இந்தியா நிரூபித்தபோது கூட, அந்த நாடு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதே இந்தப் பெரும் அவலத்தின் ஆரம்பம்.

இந்தச் சூழலில் பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய அளவில் IMF நிதி வழங்குவது… மன்னிக்க முடியாத தவறாகவே பார்க்கப்படுகிறது.

Latest news