Monday, September 8, 2025

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் : ஐரோப்பிய ஒன்றியத்திற்கு டிரம்ப் எச்சரிக்கை

விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை ‘கூகுள்’ நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன இதன் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அபராதம் நியாயமற்றது என்றும் இதுபோன்ற பாரபட்சமான நடவடிக்கைகளை தந்து நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News