Wednesday, January 14, 2026

அமெரிக்க கல்வித் துறையில் கை வைத்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திடவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றபோதே கல்வித் துறையைக் கலைக்கும் பணிகளை மேற்கொண்டார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்திடவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க கல்வித்துறையின் கீழ் 1,00,000 அரசுப் பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கல்வியின் தரத்தை கண்காணிக்கும் துறையை எப்படி கலைக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, நிதி பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கான நிதியையும், சிறப்பு மாணவர்களுக்கான திட்டங்களையும் அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என் கல்வித் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

Latest News