அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் அதே அளவுக்கு வரி விதிக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:
சீனா – 34%
ஐரோப்பிய ஒன்றியம் – 20%
பிரிட்டன் – 10%
வியட்நாம் – 46%
தைவான் – 32%
ஜப்பான் – 24%
மலேசியா- 24%
தென் கொரியா- 25%
தாய்லாந்து – 36%
சுவிட்ஸர்லாந்து – 31%
இந்தோனேசியா – 32%
கம்போடியா- 49%
இலங்கை – 44%
பாகிஸ்தான் – 29%