அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து பேசிய டிரம்ப், “இது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். குடியரசுக் கட்சியுடன் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம்.
ஜனநாயகக் கட்சியினர் தங்கள் வழியைத் தவறவிட்டுவிட்டனர். ஆனால் அது எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது, மேலும் மூன்றாம் கட்சியைத் தொடங்குவது குழப்பத்தையே அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.