டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக தேவை என்று கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனை வலியுறுத்தும் வகையில், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து பகுதிக்காக தனியாக ஒரு தூதரை அவர் நியமித்துள்ளார். மேலும், அந்த பகுதி அமெரிக்காவுக்கே கிடைத்தாக வேண்டும் என்றும் ட்ரம்ப் வெளிப்படையாக கூறியுள்ளார்.
