அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். இதையடுத்து பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.
