Sunday, February 23, 2025

எலான் மஸ்கின் மகன் செய்த வேலையால் அப்செட்டான டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அண்மையில் எலான் மஸ்க் தனது 4 வயது மகனை அழைத்துக்கொண்டு அதிபரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது எலான் மஸ்கின் மகன் தனது மூக்கை துடைத்துவிட்டு அப்படியே மேஜை மீது கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கவனித்த டிரம்ப், எங்கே தர்மசங்கடத்தில் நெளிந்துள்ளார். இதையடுத்து டிரம்ப் தனது மேஜையை மாற்றியுள்ளார்.

டிரம்ப் மேஜையை மாற்றியதற்கு எலான் மஸ்க் மகன் செய்த செயலே காரணம் என நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

Latest news