ரஷிய அதிபர் புதினை சந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷியா -உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உடன்பாடு இல்லை என்று ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை சந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, வீணான சந்திப்பில் எனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
