அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அவர் தீவிரமாக எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யூஎஸ்ஏஐடி) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நேற்றிரவு அனுப்பிய மின்னஞ்சலில், ”நீங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவிப்பதில் வருத்தப்படுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.