Wednesday, February 4, 2026

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க சட்டப்படி பதவி விலகிய துணை அதிபருக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும். அதிபராக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரிசின் பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது. இதனால் இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.

Related News

Latest News