Monday, December 1, 2025

ஒரே ஒரு போன் கால்! ஜப்பானுக்கு Trump நேரடி எச்சரிக்கை!

உலக அரசியலில் ஒரு மிகப்பெரிய, பகீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது! தைவான் விவகாரத்தில், தனது நெருங்கிய கூட்டாளியான ஜப்பானுக்கே எதிராக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பதாக, வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, ஜப்பானை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. வாங்க, இதன் பின்னணியில் இருக்கும் மர்மமான ராஜதந்திர நகர்வுகளைப் பார்க்கலாம்.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சிக்கு ஒரு போன் கால் செய்துள்ளார். அந்த போன் காலில், “தைவான் இறையாண்மை விவகாரத்தில், சீனாவைத் தூண்டிவிடும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம்” என்று டிரம்ப், ஜப்பானுக்கு அறிவுரை கூறியதாக, அதாவது ஒரு வகையில் கடுமையாக எச்சரித்திருப்பதாக, அந்த அறிக்கை கூறுகிறது.

சரி, எதுக்கு டிரம்ப் திடீர்னு இப்படிப் பேசணும்? அமெரிக்காவோட மிக நெருங்கிய கூட்டாளி ஜப்பான்தானே? இங்கதான் ட்விஸ்ட்டே இருக்கு! டிரம்ப், ஜப்பானுக்கு போன் செய்வதற்கு முன்பு, அவருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடமிருந்து ஒரு போன் கால் வந்துள்ளது. அந்த போன் காலில், ஜி ஜின்பிங், “தைவான், வரலாற்று ரீதியாக சீனாவுடையது. உலக ஒழுங்கை நிர்வகிப்பதில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பு இருக்கிறது” என ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.

இப்போ புரியுதா? ஜி ஜின்பிங் போன் பண்ணிப் பேசிய அடுத்த சில மணி நேரங்களிலேயே, டிரம்ப், ஜப்பானுக்கு போன் செய்து, “அமைதியா இருங்க”ன்னு சொல்லியிருக்கார். இது, இந்த விவகாரத்தில், அமெரிக்கா, சீனாவுக்குச் சாதகமாகச் செயல்படுகிறதோ என்ற ஒரு பெரிய சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் மாற்றம், ஜப்பானுக்கு ஒரு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவான் விஷயத்தில் ஜப்பான் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அதன் முக்கியக் கூட்டாளியான அமெரிக்காவே இப்படிச் சொல்லியிருப்பது, ஜப்பானுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News