சென்னை பெரம்பூரில் ஜூலை 15 திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது : காமராஜருக்கு ‘ஏசி’ இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க கருணாநிதி ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறினார்.
திருச்சி சிவாவின் இந்த சர்ச்சை பேச்சு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கோபமடையச் செய்துள்ளது. இதனால், தி.மு.க. – காங்கிரஸ் இடையே மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.