Saturday, December 27, 2025

பள்ளியில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த பழங்குடியின மாணவிகள் – வைரல் வீடியோ

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவிகள் ஆசிரியைக்கு மசாஜ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட போது, அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார். இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News