சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த சில முக்கிய விரைவு ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உழவன் எக்ஸ்பிரஸ் நவ. 10 முதல் 29 வரை தஞ்சாவூர் – தாம்பரம் இடையே இயக்கப்படும்.
கொல்லம் – சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும்.
ராமேஸ்வரம் – சென்னை சேதுஅதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வந்து சேரும்.
ராமேஸ்வரம் – சென்னை விரைவு ரெயில் நவ. 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வந்து சேரும்.
மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
