கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.