சிக்னல் இல்லாமல் பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் ரயில்வே கேட் மூடுவதில் தாமதம் ஏற்பட்டதால், சிக்னல் இல்லாமல் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

அம்பாசமுத்திரம்– திருநெல்வேலி பிரதான சாலையில், கூனியூரில் இருந்து சேரன்மகாதேவி வரை 3 கி.மீ. தூரத்திற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் இருந்த கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது கிழக்கு பகுதியில் உள்ள கேட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நேற்று இரவு மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற சிறப்பு ரயில், இரவு 9 மணியளவில் சேரன்மகாதேவி நிலையத்தை கடக்க வந்தது. ஆனால், கிழக்கு பகுதியிலுள்ள ரயில்வே கேட்குறித்த நேரத்தில் மூடப்படவில்லை. இதனால் சிக்னல் கிடைக்காமல், கேட் முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டது.

பணியில் இருந்த பெண் கேட் கீப்பர், ரயில் வருவதை கவனிக்காமல் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரயில் வந்ததை அறிந்து, விரைந்து வந்து கேட் மூடினார். அதனைத் தொடர்ந்து ரயில் இயக்கப்பட்டது.

Related News

Latest News