நாடு முழுவதும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு டிசம்பர் 26, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
215 கிமீக்கு மேல் சாதாரண வகுப்புக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், மெயில் மற்றும் விரைவு ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் 500 கி.மீ தூரம் பயணம் செய்ய ரூ.10 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
புறநகர் சேவைகள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள் அல்லது 215 கிமீ வரையிலான சாதாரண வகுப்பு பயணங்களுக்கு எந்த அதிகரிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த கட்டண சீரமைப்பின் மூலம், நடப்பு ஆண்டில் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
