தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, வடகிழக்குப் பகுதியில் உள்ள உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.
அப்போது, பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய கிரேன் திடீரென சரிந்து, ஓடிக்கொண்டிருந்த ரயிலின் ஒரு பெட்டியின் மீது விழுந்தது.
இதன் காரணமாக ரயில் தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 22 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளும், விபத்து ஏற்பட்ட இடத்தைச் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
