Wednesday, April 2, 2025

தொல்லை கொடுக்கும் ஸ்பேம் கால்கள் : TRAI எடுத்த அதிரடி முடிவு

தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அதிரடி முடிவு எடுத்துள்ளது.

வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் தேவையற்ற அல்லது ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

ஸ்பேம் மற்றும் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். மொபைல் எண்கள் வழியாக வணிக நோக்கிலான விளம்பர தொடர்பு கூடாது என விதிகளை மாற்றியுள்ளது.

Latest news