Thursday, December 26, 2024

ரோட்டில் கிடந்த பையில் 45 லட்சம் ரூபாய்

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள போக்குவரத்து காவலர் ஒருவர்,சாலையில் கிடந்த பையில் இருந்த  45 லட்சம் ரூபாய் பணத்தை  உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து  முன்மாதிரியான நேர்மையைக்  காட்டியுள்ளார்.

ராய்ப்பூரில் போக்குவரத்து காவலராக உள்ளவர்  நிலம்பர் சின்ஹா,அவர் பணியில் இருந்த  போது சாலையில் ஒரு பையை கண்டுள்ளார்.பின் அந்த பையை சோதனை செய்ததில் உள்ளே 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டறிந்த அவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பையை ஒப்படைத்தார்.

பையில் சுமார்  45 லட்சம் ரூபாய் இருந்ததாகவும்,இதை ஒப்படைத்த காவலர் சின்ஹாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Latest news