Thursday, August 7, 2025
HTML tutorial

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழா கொண்டாட்டம் வருகிற 15.08.2025 ஆம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகத்தில், கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 08, 11 மற்றும் 13 ஆகிய தினங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது.

இந்த 3 நாட்களுக்கு காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை கீழ்க்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை. அமையப்பெற்றுள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

காமராஜார் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா அண்ணாசாலை, மன்ரோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை அடையலாம்.

ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், தலைமைசெயலகம் வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road), ராஜா அண்ணாமலை மன்றம். முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, மன்ரோ சிலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News