Monday, May 12, 2025

ஊசி குத்துவது போன்ற வேதனை தரும் நோய்! பிரபல பாடகிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) அரிய வகை நரம்பியல் பாதிப்புக்கு ஆளானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Conservatorship என்ற சட்ட வழிமுறையின் படி, தன் வாழ்க்கையின் 13 வருடங்களை தன் தந்தை மற்றும் பிறரின் அதீத கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்து வந்த பிரிட்னி, அண்மையில் தான் அதற்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்று சுதந்திர காற்றை சுவாசித்தார்.

இந்நிலையில், தனக்கு குணப்படுத்த முடியாத நரம்பியல் பாதிப்பு உள்ளதாக பிரிட்னி தெரிவித்துள்ளார். மூளைக்கு தேவையான ஆக்சிஜென் செல்லாத பட்சத்தில், மூளை அப்படியே உறைந்து விடுவதாகவும் கழுத்து மற்றும் வலப்புற உடல் முழுவதும் ஊசியால் குத்துவது போன்ற வேதனையை கிட்டத்தட்ட மூன்று வருடமாக அனுபவித்து வருவதாகவும் கூறியுள்ளார் பிரிட்னி.

தான் நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரிட்னி, நடனமாடும் நேரத்தில் மட்டுமே தனது வலியை மறக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.

Latest news