தங்கம் என்னும் வார்த்தையை கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு, நாளுக்குநாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய். இப்படியே உயர்ந்து கொண்டு சென்றால் இந்த வருடத்தின் முடிவில், தங்கத்தின் விலை ரூபாய் 2 லட்சத்தை தொட்டுவிடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தநிலையில் உலகில் அதிகம் தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின்படி :-
10வது இடத்தை 612.45 டன் தங்கத்துடன் நெதர்லாந்து பிடித்துள்ளது.
9வது இடத்தில் 846 டன் தங்கத்துடன் ஜப்பான் இதில் 9வது இடத்தில் உள்ளது.
நம்முடைய இந்தியா 879.6 டன் தங்கத்துடன் 8வது இடத்தில் இருக்கிறது.
1039.9 டன் தங்கத்துடன் சுவிட்சர்லாந்து 7வது இடத்தில் உள்ளது.
2294.5 டன் தங்கத்துடன் சீனா 6வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
2329.6 டன் தங்கத்துடன் இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் ரஷ்யா இதில் 5வது இடத்தில் உள்ளது.
2437 டன் தங்கத்துடன் பிரான்ஸ் 4வது இடத்தில் இருக்கிறது.
2451.8 டன் தங்கத்துடன் இத்தாலி 3வது இடத்தில் இருக்கிறது.
3351.5 டன் தங்கத்துடன் ஜெர்மனி 2ம் இடத்தில் உள்ளது.
உலக நாட்டாமை அமெரிக்கா 8133.5 டன் தங்கத்துடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
