திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நாளை (11.04.25) ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இந்த படம் நாளை ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் OTT தளங்களில் வெளியாக உள்ளது.
இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பெருசு. காமெடி திரைப்படமாக வெளியான இப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. இப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நாளை வெளியாகிறது.
ரூ.10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘கோர்ட்’ திரைப்படம் ரூ.57 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.