கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் வரை தக்காளி ஒரு கிலோ ரூ.20 என்ற அளவில் விற்பனை ஆனது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடியில் நாட்டு தக்காளி மற்றும் பெங்களூர் தக்காளி கிலோ 70 ரூபாய் மற்றும் 80 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
சில்லறை விற்பனையில், சாதாரண தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.