கார்த்திகை மாத விரதம் மற்றும் கனமழை காரணமாக தமிழகத்தில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை இருமடங்காகியுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் மழை இன்னும் தீவிரமடையும் என்ற காரணத்தால் தக்காளியின் வரத்து குறைந்து மேலும் தக்களி நிலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய காய்கறி விலை என்ன?
- பீட்ரூட் – ₹50 / கிலோ
- வெண்டைக்காய் – ₹40 / கிலோ
- கத்திரிக்காய் – ₹30–₹40 / கிலோ
- உருளைக்கிழங்கு – ₹50 / கிலோ
- சின்ன வெங்காயம் – ₹60 / கிலோ
- அவரைக்காய் – ₹70 / கிலோ
- கேரட் – ₹60 / கிலோ
- இஞ்சி – ₹100 / கிலோ
- பீன்ஸ் – ₹60 / கிலோ
- முள்ளங்கி – ₹45 / கிலோ
- தக்காளி – ₹45–₹60 / கிலோ
- பெரிய வெங்காயம் – ₹20–₹25 / கிலோ
