Friday, January 3, 2025

ஹாலிவுட்டுக்கு ஆப்பு வைத்த ரஷ்யா! Tom Cruiseக்கு நேர்ந்த சோகம்

தனது அசாத்திய ஸ்டண்ட்கள் மற்றும் தனித்துவமான நடிப்பினால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருப்பவர் Mission Impossible action படத்தொடர் நாயகனான Tom Cruise.

அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பின் படி NASA, Space X போன்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளோடு இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து எடுக்க திட்டமிடப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் டாம்.

இந்த திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், விண்வெளி நிலையத்தில் படமாக்கப்பட்ட முதல் படத்தில் நடித்த பெருமையை டாம் பெற்றிருப்பார். ஆனால், அந்த கனவு ரஷ்ய இயக்குநர் கிளிம் ஷிப்பென்கோவால் கலைந்துள்ளது.

காரணம், Tom Cruise பட அறிவிப்பிற்கு நான்கு மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட ‘The Challenge’ என்ற கிளிம்மின் திரைப்படம் முழுவதுமாக படமாக்கப்பட்டு, ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி விண்வெளி நிலையத்துக்கு பயணமான கிளிம் மற்றும் ரஷ்ய நடிகை யூலியா 12 நாட்களில் விண்வெளி நிலைய படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் Tom Cruiseஇன் படத்துக்கு முன்னதாகவே வெளியாகும் என்பதால், முதல் விண்வெளிநிலையப் படம் எடுத்த பெருமையை ரஷ்யாவிடம் இழந்துள்ளது ஹாலிவுட்.

Latest news