ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் டாம் குரூஸ். டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது ‘மிஷன்:இம்பாஸிபிள்’ திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, ‘மிஷன் இம்பாஸிபிள்- தி பைனல் ரெக்கனி’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
டாம் குரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
