Wednesday, April 2, 2025

தமிழகத்தில் நாளை முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்

தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது.

வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில், இன்று மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கையை ஏற்கனவே அனுப்பியிருந்தது.

Latest news