மகாராஷ்டிராவில் 1 லட்சம் வாகனத்துக்கு ரூ.5 கோடி சுங்கக் கட்டணம் வாபஸ்

மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகம் (எம்எஸ்ஆர்டிசி) வெளியிட்ட தகவலின்படி, இந்த மாத தொடக்கத்தில் மும்பை–புனே எக்ஸ்பிரஸ் பாதையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு ரூ.5.16 கோடி சுங்கக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3ஆம் தேதி, அதிவேக நெடுஞ்சாலையின் கோபோலி பகுதியில் எரிவாயு டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் சுமார் 33 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று போனதால், ஆயிரக்கணக்கான பயணிகள் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த அவசரநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு செலுத்திய சுங்கக் கட்டணத்தை திருப்பி வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News