தமிழகத்தில் வரும், 1ம் தேதி முதல், 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 25 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதை ரத்து செய்ய வேண்டும்’ என, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ் கூறுகையில், ”சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து, வானகரம் சுங்கச்சாவடியில் வரும் 1ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மாநிலம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில், முற்றுகை போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.